ஆவணங்கள் இன்றி ஏடிஎம் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.47 கோடி பறிமுதல்..!
புதுச்சேரி மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில் மூன்றனை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்திலிருந்து ஆவணங்கள் இன்றி மூன்று கோடியை 47 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து பறிக்கப்பட்டது.
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





