--- --:--:-- --

வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காதால் தர்ணா..!

9

யிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த ஒன்பது மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை சேர்ந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார்.

 

கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத குழந்தைக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த நிலையில் அங்கு நான்கு மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாகவும் துண்டு சீட்டில் மருந்து எழுதி கொடுத்து வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு செவிலியர்கள் கூறுகிறார்கள்.

 

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதனிடையே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon