--- --:--:-- --

நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது : ராகுல் காந்தி

3

ரேந்திர மோடி அரசு நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் நாட்டின் சில இடங்களில் மாணவர்கள் வினாத்தாள் கசிவால் விரக்தி அடைந்துள்ளதாகவும், சில இடங்களில் தங்களின் குரலை உயர்த்தியதற்காக தடியடிக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

காங்கிரஸ் துணை ஆட்சியரிடம் இருந்து ராணுவத்தினருக்கான ஆட்சியர் வரை சிறிய அளவிலான தேர்வுகளை கூட பாஜக அரசு நியாயமாக நடத்த முடியவில்லை என விமர்சித்துள்ள ராகுல் இது இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

 

வேலையை உருவாக்கும் நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு விற்று விட்டு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதே மோடி அரசின் கொள்கை எனவும் அவர் கடுமையாக சாடினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon