--- --:--:-- --

கல்யாணம் ஆன மூன்று நாளில் நெஞ்சுவலியால் உயிரிழந்த மாப்பிள்ளை..!

12

ங்கரன்கோவில் அருகே திருமணமாகி மூன்று நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆலகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மருத பாண்டிக்கு வயது 27.

 

அவருடைய உறவினர் பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு நாட்கள் மனைவியின் வீட்டில் விருந்திற்கு சென்றிருந்த மருதுபாண்டி நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மறு வீட்டு சீதனமாக கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெண்ணின் வீட்டார் அனுப்பி வைத்தனர்.

 

அப்பொழுது பொருட்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் பணியில் மருத பாண்டி மற்றும் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அதிக எடை உள்ள இரும்பு பீரோவை மருதுபாண்டி மற்றும் நண்பர்கள் உதவியுடன் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார்.

 

உடனடியாக உறவினர்கள் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருதுபாண்டி சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து மருதுபாண்டி உடல் கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த புது மாப்பிள்ளையின் மரண செய்தி கேட்ட உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon