--- --:--:-- --

தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. கண்டம் துண்டமாக வெட்டி போட்ட தாய்..!

14

தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளியான 52 வயது பெண்ணின் மகன் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் வீட்டிலேயே போதைக்கு அடிமையாகி கிடந்துள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளாக அவர் பெற்ற தாய் என்றும் பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதை பொறுத்துக் கொள்ள முடியாத தாய் கடந்த 2020 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் மகன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மகனை போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

 

தொடர்ந்து அவர் தனது தாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் இன்று அதிக அளவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் மீண்டும் தாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

 

அதை பொறுத்துக் கொள்ள முடியாத தாய் மண்வெட்டியை கொண்டு தனது மகனை வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் மகனின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon