தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களை திறந்து வைத்த முதலமைச்சர்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முடிக்கப்பட்ட மற்றும் புதிய அரசு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சிக்கு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகத்தை முதலமைச்சர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கட்டுமான பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 21 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





