மின்கசிவால் கரும்புத் தோட்டத்தில் பயங்கர தீ விபத்து..!
புதுக்கோட்டையில் மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமான பயிர்கள் நாசமடைந்தன. புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி சாலையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இங்கு தீ பற்றி பயங்கரமாக எரிந்துள்ளது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அறுவடைக்கு தயார நிலையில் பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தீக்கரையான கரும்பு பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





