300 பேரிடம் பேசி பேசியே ஐந்து கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்..!
ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கோரி மோசடி செய்த பட்டதாரிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக விளம்பரம் செய்து தன்னை மட்டுமல்லாமல் பலரிடம் சுமார் 88 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்த பொறியியல் பட்டதாரிகள் சுமார் 300 பேரிடம் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்கு பணத்தை பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





