உத்திரபிரதேசத்தில் போட்டி தேர்வர்கள் போராட்டம்..!

த்திரபிரதேசத்தில் போட்டி தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக கூறி போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பாக கூடிய ஏராளமான போட்டி தேர்வர்கள் நடந்து முடிந்த காவலர் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பணியாளர் தேர்வாணைய தலைவர் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவல்துறையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

 

இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறி ஐந்தாவது நாளாக ஏராளமான போட்டி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

வெவ்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்களை அமைத்து முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாகவும் போட்டி தேர்வர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆதாரங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர பிரதேச காவல் பணியாளர் தேர்வு வாரியம் உறுதி அளித்துள்ளது.