சென்ட் தயாரிப்பாலையில் ஏற்பட்ட தீ விபத்து.. வெடித்து சிதறிய ரசாயன ஆலை.. மூவர் பலி..!
பெங்களூர் புறநகர் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத்தை விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். ராமச்சந்திரா குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்தது. காலையில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆலையை விட்டு ஓடினர். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்னும் இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் ஆலையில் இருந்த ரசாயனங்கள், சென்ட் பாட்டில்கள் குடோனில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகியது. ஐந்து பேர் தீக்காயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





