நடுவானில் விமான கோளாறு.. மரணத்திலிருந்து தப்பித்த ராஷ்மிகா..!
நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் விபத்தை தவிர்க்க அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் ஸ்வேதா சுடன் மும்பையில் இருந்து ஹைதராபாத் விமானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களால் விமான புறப்பட்ட 30 நிமிடங்களில் மும்பைக்கு திரும்பியுள்ளது.
சமீபத்தில் அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்று நாம் மரணத்தில் இருந்து தப்பித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





