--- --:--:-- --

கழிவு நீர் குழியில் விழுந்த சிறுவன் பலி..!

4

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து 2 1/2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அரியலூர் மாவட்டம் பேச்சிகுடி கிராமத்தில் உள்ள வடக்கு காலணியை சேர்ந்த ஐயாவு என்பவரின் இளைய மகன் சர்வேஸ்வரன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது மாயமானான்.

 

இதனையடுத்து சிறுவன் கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். சிறுவனை மீட்டு பார்த்த பொழுது உயிரிழந்தது தெரிய வந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுவனின் இறப்புக்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon