--- --:--:-- --

மெமரி கார்டில் இருந்து பாலியல் துன்புறுத்தல் வீடியோ.. நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை..!

10

கேரளாவில் கடத்தல் சம்பவத்தில் மெமரி கார்டை சட்டவிரோதமாக பார்த்த விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை கோரி மாநில உயர்நீதிமன்றத்தை நடிகை நாடியுள்ளார். கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்திய நபர்கள் பாலியல் துன்புறுத்தலை வீடியோவாக பதிவு செய்திருந்தனர்.

 

அந்த காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக மெமரி கார்டில் உள்ள வீடியோ பார்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரித்த நிலையில் விசாரணை அறிக்கை தனக்கு தர வேண்டும் என நடிகை கோரிக்கை விடுத்தார்.

 

ஆனால் இதுவரை வழங்கப்படாததால் விசாரணை அறிக்கையின் நகலை வழங்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகை மனுதாக்கல் செய்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon