--- --:--:-- --

ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடக்கும் மாணவர்கள்..!

10

திருப்பூர் ரயில் இரும்பு பாதையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து கடந்து வருகின்றனர். திருப்பத்தூர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 

இதில் கிழக்கு பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு மருத்துவமனைகளுக்கும் ரயில்வே இருப்பு பாதையை கடந்து செல்ல வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் ரயில் வருவதை கூட கவனிக்காமல் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு கேட் அமைத்து தர வேண்டும் என்றும் பள்ளி நேரங்களில் காவல் அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon