மது போதை.. ஆற்றில் குளித்த நண்பர்கள் நீரில் மூழ்கி இருவர் பலி..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மதுபோதையில் ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பவானி ஆற்றங்கரையில் ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர் தேவேந்திரன் உள்ளிட்ட 4 பேர் மது அருந்திவிட்டு ஆற்றில் குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஸ்ரீராம் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கிய நிலையில் தேடுதலுக்கு பின்னர் ஸ்ரீ ராம் சடலமாக மீட்கப்பட்டார். மற்றவர்களின் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





