திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை.. உயிர் தப்பிய சிறுவன்..!
தர்மபுரியில் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மூக்கா ரெட்டி பகுதியில் சுரேஷ் என்பவரின் மகன் ஸ்ரீதர்ஷன் பள்ளி முடிந்து விட்டிற்கு தனியாக இருந்துள்ளான்.
அப்பொழுது வீட்டின் மேற்கூறையை திடீரென இடிந்து விழுந்ததில் சிறுவன் மின்னல் வேகத்தில் வெளியே ஓடிவந்துள்ளார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையிலும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தால் அந்த பகுதியில் நிம்மதி ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





