தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலர்ட்..!
ஜனவரி மாதம் பிறந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடருகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




