--- --:--:-- --

பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட சீரியல் நடிகருக்கு போலீஸ் வலை..!

4

நந்தினி, சாக்லேட், கண்ணான கண்ணே, அபியும் நானும், அன்பே வா, கயல் ஆகிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ராகுல் ரவி. இதுவரது மனைவி லட்சுமி. வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

 

ராகுலுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது நண்பர்கள் மூலம் லட்சுமிக்கு தெரிய வந்தது. இது பற்றி கேட்ட பொழுது லக்ஷ்மியை ராகுல் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

 

தனது கணவரின் நிலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டிலக்ஷ்மி அவர் வசித்த அப்பார்ட்மென்ட்க்கு போலீசார் மற்றும் அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் சென்று பார்க்க அங்கு வேறொரு பெண்ணுடன் ராகுல் ரவி இருந்ததாக கூறப்படுகிறது.

 

இரு வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்ததிலிருந்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தது ஆபாசமாக வாட்ஸப்பில் பேசியது இது குறித்து கேட்டால் தன்னை தாக்கியது என ராகுலின் அராஜகங்களை அவர் புகாராக கொடுக்க காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

 

இந்த வழக்கில் கைதாவதையை தடுக்க ராகுல் ரவி முன்ஜாமீன் கேட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon