--- --:--:-- --

குழந்தை ஈன்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று..!

9

நாமக்கலில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நாமக்கல் எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக இருமல் பாதிப்பு இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.

 

இதை எதிர்த்து அந்த பெண்ணை நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிற்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். பின்னர் அங்கு அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

குழந்தையின் தாயும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்ணின் சொந்த ஊரில் மருத்துவ குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உறவினர்களுக்கு காய்ச்சல் பாதிப்பை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon