பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ஆம் தேதி பெய்த மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டன.
இந்த சுவடுகள் மறைவதற்குள் தென் மாவட்டங்களை அதிகனமழை புரட்டிப்போட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்கனவே நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில், நாளை நண்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். அடுத்தடுத்து வெள்ள பாதிப்புகளால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




