மாமியாரை தாக்கிய மருமகள்.. வெளியான வீடியோ..!
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியை மருமகள் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் மருமகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா பகுதியை சேர்ந்த மூதாட்டி தனது மகனோடு வாழ்ந்து வருகிறார். மூதாட்டியை இரண்டு குழந்தைகள் கண் முன்னே ஒரு பெண் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து காவல் துறை நடத்திய விசாரணையில் மூதாட்டியை கொடூரமாக தாக்கியது அவரது மருமகள் என்பது தெரியவந்தது. மூதாட்டியின் மகனை இரண்டாவது திருமணம் செய்த பெண் தனது மாமியாரை ஓராண்டு காலமாக கொடூரமாக தாக்கியதுடன் தனது கணவரையும் தாக்கி வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இருவரும் காவல்துறையில் புகார் கொடுக்காமல் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கொடூரமாக மருமகள் தாக்குவதை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்தது.
மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் சில ஆண்டுகளாக இது நடந்து வருவதை காவல்துறையினர் உறுதி செய்தனர். கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





