--- --:--:-- --

காட்டுப்பகுதியில் திடீரென வந்து இறங்கிய ஹெலிகாப்டர்.. மக்கள் அதிர்ச்சி..!

8

சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் திடீரென வந்து இறங்கிய ஹெலிகாப்டரால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

 

இதில் ஏழு சாத்தான்குளம் அருகே உள்ள ஆம்பளச்சேரி நர்சரி சாலைக்கு நடுவே, காட்டுப்பகுதியில் திடீரென பறக்க ஹெலிகாப்டர் இறங்கியது. பின்னர் அதில் வந்தவர்கள் விலை உயர்ந்த கார்களில் சென்றனர்.

 

திடீரென அந்த பகுதியில் ஹெலிகாப்டர் வந்ததால் மக்கள் சற்று பீதி அடைந்தனர். நிறுவன தொழில் அதிபர்கள், புதிய கம்பெனி அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஹெலிகாப்டரில் வந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon