--- --:--:-- --

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

4

தமிழ்நாட்டில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும் இலவசமாகவும் அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற வழங்கப்படுவதன் மூலம் ஏராளமான மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

 

மேலும் பொங்கல் நிதி உதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பொதுமக்களின் நன்மை கருதி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அது என்னவென்றால் ரேஷன் கடை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல் ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்த புகார்களை தெரிவித்தது போன்றவை குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி மேற்கொள்ள தமிழக அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே குறைதீர் முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

 

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளதால் ரேஷன் அட்டைதாரர்கள் இதில் கலந்துகொண்டு பயன்படலாம்.

 

மேலும் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் சேவைகள் ஏதாவது குறைபாடுகள் குறித்து புகார் இருந்தாலும் அவற்றை பொதுமக்களின் முகவர்கள் தெரிவித்தால் குறைகள் விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon