சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருக்கு திருமணம்..!

ன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கி சில வாரங்களிலேயே டாப் இடத்தை பிடித்து இருக்கிறது சிங்கப்பெண்ணே சீரியல். ஏற்கனவே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த கயல் சீரியலை இது பின்னுக்கு தள்ளிவிட்டது.

 

சிங்கப்பெண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு விஜய் டிவி நடிகை உடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

 

விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா அரவிந்த் என்பவரை தான் அமல்ஜித் காதலித்து வருகிறார்.

 

அவர்கள் காதலுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.