எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்த பெண் திடீர் மரணம்..!

சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததால் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சிதம்பரம் மன்னாரை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி வசந்தா, எலும்பு முறிவு ஆய்வு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்றாம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையிலிருந்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடியை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும் இரண்டு இறந்த பெண்ணின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இதனையடுத்து சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.