மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!

சேரி என்று தான் கூறிய வார்த்தையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்த நடிகை குஷ்பூ தனது வீட்டின் முன் போராடினால் பப்ளிசிட்டி கிடைக்கும் என காங்கிரஸ் போராட்டம் நடத்துவது குறித்து விமர்சித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியினர் நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர் தவறு செய்திருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டிருப்பேன் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்தார்.