--- --:--:-- --

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

10

திருப்பத்தூர் அருகே 18 வயது உட்பட்ட சிறுமிகளை இளைஞர் ஒருவர் சைக்கோ பாணியில் கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக வெளியாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் அருகே முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த ஒன்பதாம் தேதி முதல் காணவில்லை எனக்கூறி பெற்றோர் போலீசில் புகார் அளித்து தேடி வந்தனர்.

 

எல்லையில் தனியே நின்று கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்து மீட்ட நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 41 வயதான கோவிந்தராஜ் என்பவர் மீது கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

 

கோவிந்தராஜன் தான் கடத்தியதாகவும் போலீசார் தேடி வருவதை அறிந்தவர் சிறுமியை கிராமத்தின் எல்லையில் வெட்டிவிட்டு தப்பியோடியதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

 

தொடர்ந்து இதே போல பல சிறுமிகளை கோவிந்தராஜ் ஆசை வார்த்தை கூறி கடத்தி செல்வதும் இந்த சைக்கோ வாயில் அவரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு இவ்வாறு தப்பி செல்வதாகவும் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon