--- --:--:-- --

கப்பலில் பழுது பார்க்கும் போது கேஸ் பைப் வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!

2

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும் போது கேஸ் பைப் வெடித்ததில் ஒருவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். ஜோஸ்வா, ராஜேஷ், புஷ்பலிங்கம் ஆகியோர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பழுது நீக்கும் பணிக்காக ஒரிசாவில் இருந்து கடந்த 31-ம் தேதி எண்ணெய் கப்பல் வந்தது. எண்ணெய் கப்பலில் பழுது நீக்கும் பணியின் பொழுது கேஸ் பைப் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon