முதியவரிடம் பணம் பெற்று ஏமாற்றிய 5 பேர் கொண்ட கும்பல்..!
கொடுங்கையூரில் முதியவரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற முதியவரிடம் இருந்து ரவிக்குமார் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக தனது வீட்டின் பத்திரத்தை கொடுத்து 13 லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் வங்கி கடன் பெறுவதற்காக வீட்டு பத்திரத்தை பெற்ற ரவிக்குமார் அதையடுத்து பணத்தை திரும்பி தராமல் இருந்துள்ளார். இதனால் பணத்தை திருப்பி கேட்ட அவரை ரவிக்குமார் குடும்பத்தினர் தாக்க முயன்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரவிக்குமார் உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





