தனியார் விடுதியில் அறை கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார்..!
நெல்லை தனியார் விடுதியில் அறை கேட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மிரட்டியதாக எழுந்த புகாரில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரியும் பேச்சு முத்து, எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றின் இலவசமாக ஆக்கிரத்து மிரட்டியதாகவும் அறை கொடுக்காத காரணத்தினால் வேண்டுமென்றே விடுதியில் சோதனை செய்ததாக கூறப்படும் நிலையில் அதன் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியதைடுத்து போக்குவரத்து பணியை கவனிக்க வேண்டிய ஆய்வாளருக்கு தனியார் விடுதியில் சோதனை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என விடுதி நிர்வாகத்தினர் சமூக வலைதளம் மூலமாக குற்றம் சாட்டினர்.
இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு ஏற்றப்படும் என தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





