இனி எந்த சூழ்நிலையிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை..!
இனிமேல் எந்த சூழ்நிலையிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்காது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவைப் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட மோதல் முற்றி அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிமுக – பாஜக இடையேயான விரிசல் என்பது தற்காலிகமானதே எனவும், தேர்தலின் போதோ அல்லது தேர்தலுக்குப் பிறகோ பாஜகவுடன் அதிமுக இணையும் எனவும் பல்வேறு தரப்பிலும் கருத்துகள் எழுந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




