மலையாள திரையுலகம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை இடம்பிடித்தாவர் நடிகை சாய் பல்லவி. என்னதான் அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவருக்கு தென்னிந்திய அளவில் புகழ் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது பிரேமம் படம் தான்.
அப்படம் வெளிவந்த பின் சாய் பல்லவி என்று இவரை அழைத்தவர்கள் குறைவு தான். ஏனென்றால் எங்கு திரும்பினாலும் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
மலையாளம், தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பல திரையுலகில் பயணித்து வரும் சாய் பல்லவி அடுத்ததாக தமிழில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின் எந்த படத்தில் சாய் பல்லவி கமிட்டாக போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கும் NC 23 எனும் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் நாகசைதன்யா மீனவராக நடிக்கவுள்ளாராம்.இந்த ஜோடி ஏற்கனவே தெலுங்கில் வெளிவந்த லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.