தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய முடியாது..!

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக – பஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

அதிமுக நிர்வாகிகள் கூறுவதற்கு தான் பதில் கூற முடியாது என்றும் மேலிடத்தில் தான் அதற்கு பதில் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனி மனித விமர்சனங்களை தான் முன்வைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அண்ணா குறித்து தரக்குறைவாக எங்கேயும் எப்போது பேசியதில்லை, சரியாகவே பேசியுள்ளேன் என விளக்கமளித்த அண்ணாமலை, அண்ணா குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய முடியாது என்றும் ஆக்ரோஷமாகத்தான் நான் அரசியல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக – பஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.