கூல் சுரேஷ் ஏற்கனவே என்கிட்ட அப்படி நடந்திருக்காரு, பளார்னு அடிச்சிருக்கணும்..!

மீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான சரக்கு என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட கூல் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரிடம் காலத்தில் மாலையை போட்டார். உடனடியாக அந்த பெண் டையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 

இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து பேசிய தொகுப்பாளர் ஐஸ்வர்யா, எனக்கு அந்த சம்பவம் இப்பொது நினைத்தாலும் அதிர்ச்சியா இருக்கு. பொது மேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? எனக்கு அப்பவே அவரை அடிச்சி இருக்கனும் என தோணுகிறது.

 

இதற்கு முன்னாடியும் என்னிடம் அப்படி நடந்திருக்கிறார். இனி அப்படி செய்தால் கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன் இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.