--- --:--:-- --

2000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!

1

தமிழ்நாட்டில் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் 100 கண் சிகிச்சை முகாம்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வர்த்தகத் துறை சார்பாக தலைமை செயலகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் நானூறு கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

அதன்படி 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் மாநிலத்தின் நிலை 2 மற்றும் நிலை 3 ஆகிய நகரங்களில் 100 கன்சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது;.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon