--- --:--:-- --

CPS ஒழிப்பு இயக்கம் சென்னையில் மாபெரும் போராட்டம்..!

9

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே. தற்போது அமலில் இருக்கும் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

எனவே பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு வாக்குகளையும் வாங்கிவிட்டு, பின்னர் ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறையவேற்றாமல் தங்களை ஏமாற்றுவதாக தமிழக அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடரும் எனவும், அடுத்த தேர்தல் வரும்போது தங்களது முடிவு தெரியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் முடிவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon