--- --:--:-- --

காரை பின்னோக்கி இயக்கிய தந்தை.. சக்கரத்தில் சிக்கிய குழந்தை..!

7

சென்னை சிட்லபாக்கத்தில் இரண்டு வயது குழந்தை காருக்கு பின்னால் இருப்பதை கவனிக்காமல் தந்தை காரை பின்னோக்கி எடுத்ததால் படுகாயம் அடைந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவினை அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

கருப்பசாமி ஜெயலட்சுமி தம்பதியினருக்கு யாழினி, யாகினி என இரண்டு வயதே ஆன இரட்டை குழந்தைகள் உள்ளன. சனிக்கிழமை மாலை யாகினி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், யாழினி வீட்டு சோபாவில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

கருப்பசாமி வெளியே செல்ல காரில் ஏறிய பொழுது வீட்டிற்குள் இருந்த யாகினி தந்தை தன்னை விட்டு விட்டு வெளியே செல்வதாக நினைத்துக்கொண்டு காருக்கு பின்னால் ஓடி வந்து நின்றதாகவும் அதனை கவனிக்காமல் அவர் காரை பின்னோக்கி இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

 

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த யாழினி பாப்பா பாப்பா என கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து கருப்புசாமி காரை விட்டு இறங்கி சென்று பார்த்த பொழுது யாகினி படுகாயம் அடைந்து வலியால் துடித்துள்ளார். இதையடுத்துவீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் யாகினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon