திருப்பூரில் பட்டியலின பெண் உணவு சமைத்ததால் காலை உணவு புறக்கணிப்பா..?
திருப்பூர் மாவட்ட அவிநாசி அருகே காலை உணவத் திட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்ததால் காலை உணவை புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காலிங்கராயன்ப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கூடம் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. ஆதிதிராவிடர் காலணியை சேர்ந்த தீபா என்பவர் உணவை சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார்.
பள்ளி குழந்தைகளை உணவுக்காக அனுமதிக்காமல் மாற்று சான்றிதழ் கொடுங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உணவு சமைத்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி குழந்தைகளுக்கு உணவை வழங்க வேண்டாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் நேற்று மீண்டும் தீபா சமைத்த உணவை 32 பள்ளி குழந்தைகள் சாப்பிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





