--- --:--:-- --

புறப்பட்ட இரண்டு நிமிடத்தில் சுக்குநூறான விமானம்..!

7

இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திரிகோணமலை உள்ள விமானப்படை தளத்திலிருந்து வழக்கமாக பயிற்சிக்கு புறப்பட்டது.

 

இந்த விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்திலிருந்து விமானி மற்றும் விமானப்படை அதிகாரி என இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon