--- --:--:-- --

திமுக நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல : முதல்வர் ஸ்டாலின்

1

திமுக எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது எனவும் நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை எனவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்றும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையின்றி இருப்பதாக சில மாவட்டங்களில் இருந்து செய்திகள் வருவதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் கட்சி அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது எனவும் நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல எனவும் குறிப்பிட்டார்.

 

அதேபோல் அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனவும் முதலமைச்சர் கூறினார்.

 

பாஜகவை பொருத்தவரை இது வாழ்வா? சாவா? தேர்தல் எனவும் எனவே ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எது வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் எனவும் அதை சமாளிக்க திமுகவினர் ஒன்றிணைந்து உடைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon