தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா, குமரி கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





