இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்..!
நாமக்கல் மாவட்டம் அளியாகவுண்டன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஆடுகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சக்திவேல் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கோட்டையில் ஆடுகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் ஆடுகள் திருடப்படுவதை கண்டறிந்தனர்.
30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டிய அந்த பகுதி மக்கள் திருடர்களை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





