மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த பெண் மேயர்..!
பீகாரில் மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த புகாரில் பெண் மேயர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சாப்ரா நகர் மேயராக ராக்கி குப்தா பதவி வகித்து வந்தார்
இவர் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஆவணங்கள் அளித்திருந்த நிலையில் விசாரணையில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. பீகாரில் இரண்டு குழந்தைகளுக்கும் மேல் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் உள்ளது.
இந்நிலையில் ராக்கி குப்தாவுக்கு மூன்று குழந்தைகள் இருப்பது உறுதியானதையடுத்து அவரை மேயர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





