கேரளாவில் காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட காவலர்கள்.. சிக்கிய வீடியோ..!
கேரளாவில் காவல் நிலையத்திற்குள் காவலர்கள் சிக்கன் சமைத்து ருசித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இலவன்தட்டா காவல் நிலையத்தில் காவலர்கள் வாகனத்தில் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி வந்து காவல் நிலையத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டு அந்த காட்சிகளை சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.
காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பணி நேரத்தில் காவலர்கள் இதுபோன்று செய்வது சரியா என்று கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனையடுத்து காணொளி குறித்து விளக்கம் அளிக்க காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





