பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த டி.ராஜா..!
சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா திடீரென மயக்கமடைந்தார்.
மணிப்பூர் வன்முறை மற்றும் பழங்குடியின பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அந்த கட்சியின் சார்பில் சென்னை தியாகராய நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் டி.ராஜா பங்கேற்று பேசினார். இந்த நிலையில் போராட்டம் முடியும் பொழுது டி.ராஜா திடீரென மயங்கி சரிந்தார். உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்து தண்ணீர் கொடுத்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





