--- --:--:-- --

ரூட்டு தலையை ரோட்டு தலையாக மாற்றிய சென்னை காவல்துறை.!

5

சென்னையில் பேருந்தில் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தியுள்ளனர்.

 

சென்னையில் அரசு பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. பலமுறை எச்சரித்தும் இந்த போக்கு தொடர்வது பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு பேருந்து மேற்பகுதியில் அமர்ந்து கொண்டும், சாலையில் அமர்ந்து கொண்டும் மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையரிடம் புகார் அளித்தனர்.

 

இந்த மாணவர்களை கண்டித்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதிய காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதியாமல் மூலப்பத்திரம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தினர். இதனை அந்த பகுதியில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டே சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon