அண்ணன் காதலித்த பெண்ணை திருமணம் செய்த தம்பி..இறுதியில் கொடூரம்..!
ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்துவிட்டு காட்டெருமை தாக்கப்பட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார்.
கும்பக்கரையை சேர்ந்த வினோத் காட்டெருமை முட்டி தலையில் காயமடைந்ததாக கூறி ஞாயிறன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தை அவரது தம்பி விவேக் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்ததால் விவேக்கை கைது செய்தனர்.
தொடர்ந்து அண்ணன் காதலித்து வந்த பெண்ணை தம்பி ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும் திருமணத்திற்கு பிறகும் அவர்கள் காதலை தொடர்ந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அண்ணனை தம்பி கண்டித்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





