கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு.. பரபரப்பான தகவல்..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு வைத்துள்ளார்.
இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகள், கடைகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்டவையும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரிய வந்த நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





