பிளாட்பாரத்தில் இரும்பு தூணில் மாட்டிக்கொண்ட சிறுமியின் தலை..!
ஆந்திர மாநிலத்தில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் உள்ள இரும்பு தூணில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலை மாட்டிக் கொண்டது. இதனை கண்ட பெற்றோர் மற்றும் சக பயணிகள் குழந்தையை மீட்க முயற்சித்தனர்.
ஆனால் குழந்தையை மீட்க முடியவில்லை. உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் அந்த தூணின் அடிப்பகுதியை வெட்டி எடுத்து சிறுமியை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





