--- --:--:-- --

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

8

மிழகத்தின் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வட கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon